Home நாடு “சீனர்கள் இராணுவத்தில் இணைய வேண்டும்!”- முகமட் சாபு

“சீனர்கள் இராணுவத்தில் இணைய வேண்டும்!”- முகமட் சாபு

869
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இராணுவப்படைகளில் எந்த விதத்திலும் பாகுபாடு நிலைக் கொண்டிருக்காது எனவும், தக்க நேரத்தில் தகுதி மிக்க இராணுவர் வீரர்களுக்குத் தேவையான வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு உறுதியளித்தார்.

மலேசியாவில், இராணுவப்படையில் சீன சமூகத்தினரின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், “இந்த நாடு அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது. அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் இராணுவத்தில் பங்கு பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்வது என்பது ஓர் இனத்தை மட்டும் சார்ந்து இருக்க முடியாது” என அவர் எடுத்துரைத்தார்.

சீனர்களை இராணுவத்தில் பங்கேற்க வைக்க, அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.