Home வணிகம்/தொழில் நுட்பம் வைய விரிவலை (வோர்ல்ட் வைடு வெப்) தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு!

வைய விரிவலை (வோர்ல்ட் வைடு வெப்) தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு!

1244
0
SHARE
Ad

கலிபோர்னியா: வைய விரிவலை (வோர்ல்டு வைடு வெப்) தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், அதனைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை டூடுல் வெளியிட்டுள்ளது.

வைய விரிவலை 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி செர்ன் ஆய்வகத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டிம் பெர்னர்ஸின் ஆய்வில் வைய விரிவலை உருவாக்கப்பட்டது.

தற்போதைய இணைய பயன்பாட்டில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ள இதனை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். வைய விரிவலை என்பது ஓர் இணைய செயலி போன்றது. இதன் வருகையால் இன்று பல்வேறு துறைகளில் பலமடங்கு முன்னேற்றமும், வேலை வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.