Home நாடு தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது!

தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது!

1267
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பெர்செ அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

நடப்பு அரசாங்கம் நம்பிக்கைக் கூட்டணி வசம் இருப்பதால், அதிகமான தேர்தல் குற்றங்களை அவர்கள் செய்திருப்பதாக அசார் கூறினார். கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களைக் காட்டிலும், செமினியில் அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது, அமைச்சர் பதவி மற்றும் அரசாங்கத் திட்டங்களை வைத்து வாக்கு கேட்டது போன்ற குற்றங்களை நம்பிக்கைக் கூட்டணி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒருவேளை இவ்வாறான வழக்க முறை அரசியல்வாதிகளுக்கு பழகிப் போன நடவடிக்கைகளாக இருக்கலாம் என அவர் கூறினார். சுமார் 21 தேர்தல் குற்றங்களை நம்பிக்கைக் கூட்டணி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி 13 தேர்தல் குற்றங்களைப் பதிவுச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.