இஸ்லாமாபாத்: ஜய்ஷ்–இ–முகமட் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், புல்வாமா பகுதியில் 44 சிஆர்பிஎப் படையினர் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதற்கு மசூத் அசாருக்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது போல சீனா தொடர்ந்து எதிர்த்து வந்தால், பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும் என பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்புக் குழு தூதர் ஒருவர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த முடிவினால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என இந்தியா குறிப்பிட்டுள்ளது.