Home இந்தியா தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

901
0
SHARE
Ad

சென்னை: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிற வேளையில்,  இதன் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில், திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் உட்பட மேலும் சில சிறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் உள்நாட்டு நேர அடிப்படையில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலும் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம் என சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.  

#TamilSchoolmychoice

வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோருடன், நான்கு பேர் மட்டுமே அலுவலகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அவர் கூறினார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருகிற மார்ச் 26-ஆம் தேதி வரையிலும் அவகாசம் உள்ளது என அவர் தெரிவித்தார்.