Home வணிகம்/தொழில் நுட்பம் பப்ஜி, இணைய விளையாட்டு தடையை விலக்க டென்சென்ட் நிறுவனம் கோரிக்கை!

பப்ஜி, இணைய விளையாட்டு தடையை விலக்க டென்சென்ட் நிறுவனம் கோரிக்கை!

741
0
SHARE
Ad

புது டில்லி: சமீபத்தில் இந்தியாவில் சில நகரங்களில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நாளுக்கு நாள் பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களிலும் நீண்டு கொண்டே போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது டென்சென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பப்ஜி என்பது ஒரு விளையாட்டு எனவும், அது ஒரு பொழுது போக்கு அம்சமாகக் கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. பயனர்கள்தான் அதனை ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான முறையில் விளையாட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இந்தியாவில் இந்த விளையாட்டினால் பிரச்சனை வராமல் இருப்பதற்காக அந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய வடிவில் பாதுகாப்பான காட்சிகள் மற்றும் சிறு வயதினருக்கு தகுந்த மாதிரி விளையாட்டின் நேர அளவு குறைத்தல் போன்ற பல முக்கிய அம்சங்கள் புகுத்தப்படும் என அது தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இந்த மேம்படுத்தப்பட்ட வடிவம் வெளியானதும், இந்த விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை இந்திய மாநிலங்கள் கருத்தில் கொள்ளும் என நம்புவதாக அது தெரிவித்தது.