கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ கட்சி தோல்வியடைந்த சூழலில், கட்சியை விட்டு வெளியேறிய உறுப்பினர்களுக்கு எதிராக அம்னோ வழக்கு தொடரும் என அம்னோவின் தலைமைச் செயலாளர் ஜெனரல் அனுவார் மூசா இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினருமான அனுவார் கூறுகையில், கட்சியிலிருந்து விலகிய அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என்றார்.
“அவர்களில் சுமார் 30 பேருக்கு எதிராக, அதாவது சபாவில் இருந்து 20 பேரும், ஜோகூர், பேராக், மற்றும் கெடாவிலிருந்து 10 உறுப்பினர்களுக்கு சட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று அவர் விளக்கினார்.
மேலும், இந்த வழக்கு குறித்து எந்த ஒரு குழப்பங்களும் நிகழாமல் இருப்பதற்காக, தாம் கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசானிடமும், கட்சி பொருளாளர் மற்றும் வழக்கறிஞர்களுடனும் பேச இருப்பதாக அவர் கூறினார்.