Home நாடு பிரதமர் ஆலோசனைபடி, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்!

பிரதமர் ஆலோசனைபடி, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்!

765
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவை உறுப்பினர்கள், மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உடனடியாக பிரதமர் மகாதீரின் ஆலோசனையை செயல்படுத்தத் தவறினால் இந்த ஒரு தவணையோடு அவர்களின் ஆட்சிக் காலம் முடிவடைந்து விடும் என எழுத்தாளர் டத்தோ அப்துல் காடிர் ஜாசின் மலேசியா கினி இணையத் தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இவர்கள் செய்யக்கூடிய தவறுக்காக, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூறுவது சரியானதாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் தவறுகளை அவர்களாகவே உணராத வரை இம்மாதிரியான சூழல் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் தங்களுக்காக பேசிய விட்டார் என்ற மமதையிலும், தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையிலும் இருப்பதை விடுத்து, மக்கள் தங்களை ஒரு கோமாளியாக எண்ணிவிடக்கூடாது என்ற ஒரு பயம் இவர்களிடத்தில் இருக்க வேண்டும் என காடிர் நினைவூட்டினார். 

#TamilSchoolmychoice

பிரதமரைப் போல் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு இவர்கள் களத்தில் இறங்கி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும். பல அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் இதனை செய்வதில்லை என மக்கள் புலம்புகிறார்கள் என காடிர் கூறினார்.

இந்நிலை தொடர்ந்தால், நம்பிக்கைக் கூட்டணி அரசு மீது மக்களுக்கு விரைவில் வெறுப்பு ஏற்பட்டு இந்த தவணையோடு ஆட்சியை முடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும் என எச்சரித்தார்.