Home இந்தியா சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார்

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார்

712
0
SHARE
Ad

சென்னை – இன்று வியாழக்கிழமை (மார்ச் 21) காலை அதிமுகவின் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார். அவரது நல்லுடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஏற்கனவே, தமிழக சட்டமன்றத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி, அதில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் மரணத்தால் சூலூர் சட்டமன்றத் தொகுதியும் காலியாகியுள்ளது.