Home இந்தியா தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்

தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்

1016
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) சற்று முன் வெளியிடப்பட்ட பாஜக கட்சி போட்டியிடும் தமிழக நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்படி தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதால், இந்தியா முழுவதும் பார்க்கப்படும் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக தூத்துக்குடி மாறியுள்ளது.

தமிழகத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பின்வருமாறு:

  • கன்னியாகுமரி – இந்தத் தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக ஆதரவு இல்லாமல் பாஜக வென்ற ஒரே தொகுதியாகத் திகழ்கிறது கன்னியாகுமரி. எனவே, பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் இங்கே வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சிவகங்கை – பாஜகவில் அடிக்கடி அதிரடி வேட்டுகளைக் கிளப்பும் எச்.இராஜா இந்தத் தொகுதியில் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்படுவார் என்பதால் சிவகங்கையும் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக உருமாறியுள்ளது.
  • கோவை – பாஜக ஆதரவு மையங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் கோவையில் சி.பி.இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
  • இராமநாதபுரம் – பாஜக போட்டியிடும் இந்தத் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் முன்பு அதிமுக கட்சியில் இருந்தவராவார். இந்தத் தொகுதியில் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தத் தொகுதியும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.