Home வணிகம்/தொழில் நுட்பம் 50-க்கும் மேற்பட்ட கடைகள் பார்க்ஸன் இருந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளன!

50-க்கும் மேற்பட்ட கடைகள் பார்க்ஸன் இருந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளன!

784
0
SHARE
Ad

கோலாலம்பூர்மலேசியாவில் பல ஆண்டுகளாக தனது இருப்பை வெளிப்படுத்தி வந்த பார்க்ஸன் குரூப் நிறுவனம், கேஎல்சிசியில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை மூடியது.

தற்போது, அவ்விடத்தை 50-க்கும் மேற்பட்ட புதிய வியாபாரக் கடைகள் குத்தகைக்கு எடுத்துள்ளன. இதனால், முக்கிய விற்பனை மையமாக திகழும் சூர்யா கெஎல்சிசி செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு பெருமளவில் இலாபம் கிடைக்க இருப்பதாக அதன் தலைமை நிருவாக அதிகாரி ஆண்ட்ரூ பிரையன் கூறினார்.

முக்கியமாக உணவு மற்றும் பானம், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரக் கடைகள் இந்த இடங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

உலகம் முழுவதும், பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு வருகின்ற வேளையில் நாம் பல்வேறு வகையான வியாபாரங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என பிரையன் கூறினார்.

கடந்த ஆண்டுமாஜு ஜங்ஷனில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை பார்க்ஸன் மூடியது குறிப்பிடத்தக்கது.  மேலும், 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுங்கை வாங் பிளாசா மற்றும் வியட்னாமில் உள்ள பார்க்ஸன் பிளமிங்டன் மையத்தையும் மூடியது.