Home நாடு தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

755
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டில் எங்கேனும் கண்டறியப்பட்டால் மலேசிய மக்கள், தைரியமாக சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்புக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இந்நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இம்மாதிரியான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாக அமைகிறது என மொகிதின் கூறினார்.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மோசமடைந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சு அதனை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது” என மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

பயங்கரவாதத்தின் அறிகுறிகள் அல்லது அசாதாரணமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் பொது மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்கிழக்காவியாவில் அதிகமான அளவில் உள்ளதாக மலாய் மேல் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.