Home நாடு “மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்

“மலாய்க்காரர்களின் வாக்குகளை நான் பெறுவேன்!”- ஶ்ரீராம்

739
0
SHARE
Ad

ரந்தாவ்: மலாய்க்கார வாக்காளர்கள் அமைதியாக இருந்தாலும், ஏப்ரல் 13-ஆம் தேதி அன்றுநம்பிக்கைக் கூட்டணிக்குவாக்களிப்பார்கள் என டாக்டர் எஸ். ஶ்ரீராம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 31-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. முன்னாள் நெகரி செம்பிலான் மந்திரி பெசார் மற்றும் தற்போதைய அம்னோ இடைக்காலத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான முகமட் ஹசானை எதிர்த்து ஶ்ரீராம் போட்டியிட உள்ளார்.

இவரைத் தவிர்த்து, சுயேட்சை வேட்பாளர்களான ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குறைந்தபட்சம் 20 முதல் 30 விழுக்காட்டு மலாய் சமூகத்தினரின் ஆதரவை நான் பெறுவேன்” என ஶ்ரீராம் தெரிவித்தார்.