Home கலை உலகம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானர்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானர்!

1145
0
SHARE
Ad

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இந்தச் செய்தியை அவரது மகனான ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

79 வயது நிரம்பிய அவர், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட அற்புதமான படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்தவர். மேலும், தற்கால இயக்குனர்களுடனும் அவர் நடித்து வந்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி, நடிகர் ரஜினிகாந்த் படமான பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர், இன்று காலமானதாக ஜான் குறிப்பிட்டுள்ளார்.