Home உலகம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்!- டிரம்ப்

அமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்!- டிரம்ப்

955
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள், ஆயுதங்கள் செய்வதற்காக பணத்தை செலவழிப்பதில் கவனத்தை செலுத்தாது, நீண்ட கால அமைதிக்கு வித்திட்டும் வழிகளைத் தேடி அதற்காக செயல்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக ஸ்பூத்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள அணு ஆயுதங்கள் உட்பட பல ஆயுதங்களுக்காக பல பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து வருகிறோம்” என்று டிரம்ப் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இம்மாதிரியான ஆயுதத் தயாரிப்புகளை நிறுத்திக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். நாம் (சீனா, ரஷ்யா, அமெரிக்கா), ஓர் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்” என டிரம்ப் கூறினார்.