Home நாடு “மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது!”- அனுவார் மூசா

“மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது!”- அனுவார் மூசா

1394
0
SHARE
Ad

ரந்தாவ்: நேற்று வியாழக்கிழமை ரந்தாவில் கொண்டாடப்பட்ட பிகேஆர் கட்சியின் 20 ஆண்டு கால நிறைவு விழாவை அம்னோவின் தலைமைச் செயலாலர் அனுவார் மூசா விமர்சித்துள்ளார்.

“உண்மையிலேயே, பிகேஆர் கட்சி மகாதீரை வீழ்த்துவதற்காகவும், பழி வாங்குவதற்காகவும்தான் நிறுவப்பட்டது. ஆனால், தற்போது, அதன் நிசத் தன்மையை இழந்து, எதிரியின் பிடியிலேயே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது” என அவர் விமர்சித்துள்ளார்.

“அந்த (பிகேஆர்) கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்தினை மறந்து, இன்று அதே எதிரியுடன் ஒரே குடையில் கீழ் செயல்படுவது, கேலிக் கூத்தாக உள்ளது” என அவர் எள்ளி நகையாடினார்.

#TamilSchoolmychoice

உங்களையும் (அன்வார்) உங்கள் குடும்பத்தினரையும் அவமதித்ததோடு இல்லாமல், பல்வேறு அவதூறுகளை சுமத்தி, எந்த ஒரு கதியும் இல்லாத போது, மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர் கட்சி, இன்று அதே மகாதீரிடம் கைக்கட்டி வேலை செய்கிறது” என அவர் குறிப்பிட்டார்.

இந்த 20 ஆண்டுக் கால கொண்டாட்டம் எதற்காக என்பதை அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.