Home நாடு காவல் துறையினரின் குற்றச் செயல்களை தடுப்பதற்கு ஐபிசிஎம்சி விரைவுப் படுத்த வேண்டும்!

காவல் துறையினரின் குற்றச் செயல்களை தடுப்பதற்கு ஐபிசிஎம்சி விரைவுப் படுத்த வேண்டும்!

774
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தைக் (ஐபிசிஎம்சி) கூடிய விரைவில் அமைக்கக் கோரி குழு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதியில் இது இடம்பெற்றுள்ளதாகவும், ஆகவே, கூடிய விரைவில் இந்த ஆணையம் நிறுவப்பட வேண்டும் என இக்குழுவிற்குத் தலைமைத் தாங்கிய எம்.வி. நந்தன் கூறினார்.

பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு காவல் துறைதான் காரணம் என சுஹாகாம் அண்மையில் கூறியதன் காரணமாக, இது குறித்த விசாரணையை கூடிய விரைவில் தொடக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.     

இந்த விவகாரமாக கொண்டுவரப்பட்ட மனு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நடப்பு அரசாங்கத்தின் பிரதிநிதிகளான பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மாரியா சின் அப்துல்லா, நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சோர் ஒத்மான் மற்றும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் ஆகியோர் இந்த மனுவை அவ்வமைப்புடன் சேர்ந்து ஒப்படைத்தனர். 

#TamilSchoolmychoice

2017 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் இவ்விரண்டு நபர்களும் காணாமல் போன நேரத்தில் காவல் துறை சிறப்பு பிரிவு மேலாளராக தற்போதைய காவல் துறைத் தலைவரான முகமட் புசி ஹருன் இருந்துள்ளார்வருகிற மே 4-ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.