Home நாடு உள்துறை அமைச்சின் சிறப்பு குழு அமைப்பில் அம்ரி மற்றும் கோ குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை!

உள்துறை அமைச்சின் சிறப்பு குழு அமைப்பில் அம்ரி மற்றும் கோ குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை!

656
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ இருவரின் நிலை குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சால் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பணிக்குழுவை அவர்களின் (அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ) குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று அம்ரி சே மாட்டின் மனைவி நோர்ஹாயாதி முகமட் அரிபின் கூறினார்.

காவல் துறையின் முன்னாள் சட்டப் பிரிவுத் தலைவர் மொக்தார் முகமட் நூர் இந்த சிறப்புக் குழுவில் நியமனம் செய்யப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர். மேலும், மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) விசாரணையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் இதில் நியமிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

“சுஹாகாமின் விசாரணையை ஆராய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்ற போதிலும், சிறப்பு பணிக்குழுவை அமைத்ததன் பேரில் தங்கள் குடும்பத்தின் துன்பங்கள் குறைக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்

நேற்று புதன்கிழமை உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் ஆறு சிறப்பு அதிகாரிகளை இந்த சிறப்பு பணிக்குழுவில் இடம்பெறுவதாக அறிவித்திருந்தார்.