Home நாடு சுதந்திரத்திற்கு கொடுத்த விலையை மலேசியர்கள் நன்குணர்ந்திருக்க வேண்டும்!- பிரதமர்

சுதந்திரத்திற்கு கொடுத்த விலையை மலேசியர்கள் நன்குணர்ந்திருக்க வேண்டும்!- பிரதமர்

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காலனித்துவ காலங்களில் முந்தைய தலைமுறையைப் போல அவமானத்திற்கு ஆளாகாமல் தற்போதைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மலேசியர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இந்த விசயத்தில் நான் அதிர்ஷ்டசாலி, அல்லது ஒருவேளை துரதிர்ஷ்டவசமானவன். படையெடுப்பாளர்களால் நம் மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் மற்றும் அனைத்து வகையான அவமானங்களுக்கும் ஆளானார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் நம் வீட்டிற்கு வந்து, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.” என்று பிரதமர் கூறினார்.

“அவர்கள் நம் நாட்டின் செல்வத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக, அவர்களோடு இணைந்து கொள்ளையடிக்க உதவுவார்கள் என்று நம்பினார்கள்என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, மலேசியர்கள், குறிப்பாக இளைஞர்கள், சுதந்திரத்தை வென்றெடுத்ததன் முக்கியத்துவத்தையும் காலனித்துவ எதிர்ப்பதையும் நன்கு உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“சுதந்திரம் இலவசமாக கிடைத்ததல்ல. அது பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. அதனை பராமரிப்பதோடு வளர்க்கப்படவும் வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.