கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் உழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை புதன்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ரோஸ்மாவை குற்றம்சாட்ட, அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலுருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
ஆயினும், இன்று மாலை பிணையில் ரோஸ்மா விடுவிக்கப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
நாளை புதன்கிழமை காலை, குற்றவியல் சட்டம் 16-வது பிரிவுக் கீழ், அவர் குற்றம்சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனையும், பெற்ற பணத்தைவிட ஐந்து மடங்கு அதிகமான அபராதம், அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.