Home நாடு “தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது!”- கைரி

“தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது!”- கைரி

748
0
SHARE
Ad

ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி, தோல்வியின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு விசயங்களை அனாவசியமாக உலறிக் கொண்டிருக்கிறது என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அம்னோ இடைக்கால தலைவரான, முகமட் ஹசானின் செல்வத்தைக் கண்டு தாம் வியக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னமே ஹசான் தென்கிழக்காசியா பகுதியின் மெர்செடிஸ் பென்ஸ் வாகன நிறுவனத்தின் தலைமை நிருவாகியாகப் பணிப்புரிந்தவர் எனக் குறிப்பிட்டுக் கூறினார்.

அப்பேர்பட்டவரின் சொத்துகள் அதிகமாகதான் இருக்கும் எனவும்,  ரந்தாவ் பகுதியை இருப்பிடமாகக் கொள்ளாத, வெளியிலிருந்து வந்தவர்களுக்கு இது புரியப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஒரு புகழ் பெற்ற உலக தரம் வாய்ந்த சொகுசு வாகனங்களின் தலைமை நிருவாக அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும் என கைரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவை அனைத்தும் நம்பிக்கைக் கூட்டணி பயத்தைக் குறிக்கிறது எனவும், இறுதி நேரத்தில் தனிநபர் தாக்குதலை நடத்தும் நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.