கோலாலம்பூர்: கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானை சந்தித்து ஜோகூர் மாநில சட்டமன்றத்தை கலைக்கும் வாய்ப்புகளைப் பற்றி ஆலோசிக்க உள்ளதாக ஜோகூர் மாநில எதிர்கட்சித் தலைவரான ஹஸ்னி முகமட் கூறினார்.
ஒருவேளை அப்படி நடந்தால் ஜோகூர் மாநிலத்தில் புதிய தேர்தல் நடக்கும் சூழல் ஏற்படும்.
தற்போதைய நம்பிக்கைக் கூட்டணி மாநில சட்டமன்ற உறுப்பினர்களில், மந்திரி பெசார் பதவியை வகிக்க, எவருக்கும் போதுமான அனுபவமும், திறனும் இல்லாததை ஹஸ்னி குறிப்பிட்டுக் கூறினார். அப்படி இருந்தால், தற்போதைய உள்துறை அமைச்சரான மொகிதின் யாசினே சிறந்த தேர்வாக இருக்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.
1986 முதல் 1995-ஆம் ஆண்டு வரையிலும், அம்னோகாலத்தில்ஜோகூர் மாநில மந்திரிபெசாராக மிகிதின் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜோகூர் ஒரு சிக்கலான மாநிலம் எனக் குறிப்பிட்ட ஹஸ்னி, அனுபவமற்ற ஒருவர் மாநில மந்திரி பெசாராக இருக்க முடியாது எனத் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை ஓன்மான் சபியான் ஜோகூர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகினார்.