கோலாலம்பூர்: தெங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும் என துணை உள்துறை அமைச்சர் முகமட் அஜிஸ் ஜம்மான் கூறினார்.
சமூக ஊடகங்களில் துங்கு இஸ்மாயிலின் பதிவானது 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டத்தை மீறுவதாக இருப்பதால், அவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, அரசியல் நிலைப்பட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து முன்கூட்டியே பேசிய பிரதமர் மகாதீர், துங்கு இஸ்மாயில் சட்டத்தை மீறினால், அவருக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்என்று வலியுறுத்தி, அவர்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு நினைவுறுத்தினார்.
இது குறித்து கருத்துரைத்த துங்கு இஸ்மாயில், நடவடிக்கை எடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது இச்செயல் நாட்டின் அரசியலமைப்பு, மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தை பாதுகாக்கும் முயற்சி என வலியுறுத்தியுள்ளார்.