Home நாடு “கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கைத் தயார், வெற்றி நம்பிக்கைக் கூட்டணிக்கே!”- ஶ்ரீராம்

“கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கைத் தயார், வெற்றி நம்பிக்கைக் கூட்டணிக்கே!”- ஶ்ரீராம்

723
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ரந்தாவ்: கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கையைக் கட்சி தயார் செய்து வருவதாக நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடைசி நேர அறிவிப்பினால் மக்களுக்கு பல்வேறு பயன்கள் ஏற்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை முடிவடைய இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது அவ்வறிக்கையின் அடக்கம் என்னவென்று அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதனில் ஏழு முக்கியமான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு மக்களின் நிலைப்பாடு நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இம்முறைதேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடஅவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார்இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும்முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.