Home உலகம் ஜப்பான் ஹொன்ஷு தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது!

ஜப்பான் ஹொன்ஷு தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது!

946
0
SHARE
Ad

ஹொன்ஷு:  6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஜப்பான் கடற்கரையைத் தாக்கியதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை ஜப்பானின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷுவின் கிழக்குப் பகுதியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கச் சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2011-ஆம் ஆண்டில், தொஹோகு பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில்  கிட்டத்தட்ட 16,000 பேர் உயிர் இழந்தனர். பெரும்பாலானோர் 133 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த 100 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பங்களில் இதுவும் ஒன்று.