சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று முடிவு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்திருந்தனர்.
15 வயதுடைய யாஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ‘மனிதக் கல்குலேட்டர்’ எனும் பெயரில், ஆசியாஸ் கோட் டேலண்ட் போட்டியில் முதல் இரண்டாவது இடத்தில் இடம் பெற்ற முதல் மலேசியர் எனும் அங்கீகாரத்தை அவர் பெறுகிறார்.
இந்த அறிவிப்பு நேற்று ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மாரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு மலேசியப் போட்டியாளர்களான, நாமா குழுப் பாடகிகளான நூர் பஸ்ரினா அனி, 28; நூர் சியாமிமி மொக்தார், 24; நோர் பாசிரா மாலிக், 24; மற்றும் நூர் பராஹிடா டோல்ஹாடி 24, ஆகியோர் கடைசிக்கு மூன்றாம் நிலையில் இடம்பிடித்தனர்.
இப்போட்டியில், தைவானின் மாய வித்தையாளரான ஏரிக் சியேன் முதலிடம் பிடித்தார்.