Home நாடு தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை!

தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை!

603
0
SHARE
Ad

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாக நேற்று வியாழக்கிழமை தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் குறிப்பிட்டதற்கு தேர்தல் ஆணையத் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான், இதுவரையிலும், சுமார் 16 தேர்தல் குற்றப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இரு பெரு கட்சிகளைச் சார்ந்தே இருப்பதையும் குறிப்பிட்டார். அவற்றில், அண்மையில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை இழுவுப் படுத்தும் வகையில் பொருத்தப்பட்டிருந்த பதாகையும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

ஆயினும், புகார் அளித்ததன் பெயரில் தாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை எனக் கூறிய அசார், அவ்வாறு செய்பவர்கள் தங்களின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.