Home உலகம் பாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது!

பாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது!

1116
0
SHARE
Ad

பிரான்ஸ்: பாரிஸின் வரலாற்று மரபுச் சின்னமாகக் கருதப்படும் நோட்ரே டோம் கசிட்ரோவில், நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினால், அக்கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக, தீயணைப்பு துறையினர் விரைவாக தீயினைக் கட்டுப்படுத்தினர்.

பாரிஸ் தீயணைப்பு துறைத் தலைமைத் தலைவர் ஜான்கிளாடி கல்லேட் நிருபர்களிடம் கூறியதாவது, தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் இருந்து கசிட்ரோவின் முக்கியக் செவ்வகக் கோபுரங்களை காப்பாற்ற முடிந்தது எனக் கூறினார்.

நோட்ரே டோமின் முக்கியக் கட்டமைப்பு காப்பாற்றப்பட்டு விட்டது, ஆயினும், கட்டிடத்திற்குள் இருக்கும் கட்டமைப்புகள் சில சரிந்துவிடும் என்ற பயமும் உள்ளது” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.  அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பிரஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் திங்கள் இரவு உரையாற்றிய போது, இந்த தீச் சம்பவம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கொடுமையான சோகம் என்றுக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சாலையோரங்களில் கதறி அழும் காட்சிகள் செய்திகளிலும், சமூகப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.  

இன்று நான் உங்களிடம் சொல்கிறேன், இந்த கசிட்ரோவை மீண்டும் கட்டியெழுப்புவோம், இது நமது நாட்டின் அடையாளம். நாளை தொடங்கி ஒரு தேசிய நன்கொடை திட்டம் துவங்கப்பட்டு நாம் ஒன்றிணைந்து இதனை நடத்தி முடிப்போம்” என மேக்ரோன் கூறினார்.