கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்கினை மாற்றியமைத்தக் காரணத்திற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத் தலைவர் அருல் கண்டா மீது அடுத்த நவம்பர் மற்றும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 29-ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு நடைபெறும் எனவும், பிறகு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 17-ஆம் தேதி வரையிலும் விசாரணைத் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் இந்த உத்தரவினை விடுத்தார். இந்த வழக்கினை முன்னாள் பிரதமரும், அருல் கண்டாவும் ஒன்றாகவே எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அரசாங்க துணை வழக்கறிஞர் ராயா பாட்னின் யூசோப் கூறுகையில், இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 25-லிருந்து 30 சாட்சிகளை நீதி மன்றம் அழைக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.