புது டில்லி: உலகத் தலைவர்களின் பேஸ்புக் பக்கங்களில் அதிகம் ‘விருப்பம்’ (Like) பெற்றத் தலைவராக இந்திய நாட்டு பிரதமரான நரேந்திர மோடி திகழ்கிறார். அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருக்கிறார்.
நரேந்திர மோடிக்கும் இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கும் இடையே மிகப் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி சமூக வலைதளத்தில் அவர் முதலிடத்தில் இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மோடிக்கு சுமார் 43.5 மில்லியன் முகநூல் கணக்குகள் பின் தொடர்கின்றன. இதற்கு அடுத்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருக்கிறார். அவரது பக்கத்தை 23.8 மில்லியன் முகநூல் கணக்குகள் பின் தொடர்கின்றன.
ஆயினும், டுவிட்டரில் மோடியைக் காட்டிலும், டிரம்ப்பை 59.7 மில்லியன் கணக்குகள் பின் தொடர்கின்றன. மோடியின் கணக்கை 46.8 மில்லியன் கணக்குகள் பின் தொடருகின்றன.