Home நாடு “ரந்தாவில் தோல்வி அடைந்ததால், அரசாங்கம் மாறப்போவதில்லை!”- மகாதிர்

“ரந்தாவில் தோல்வி அடைந்ததால், அரசாங்கம் மாறப்போவதில்லை!”- மகாதிர்

820
0
SHARE
Ad

புத்ராஜெயா: பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு மக்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை என பிரதமர் மகாதிர் முகமட் தெரிவித்தார். இந்த தேர்தல்களினால் அரசாங்கத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதால் மக்கள் அவற்றில் கவனம் செலுத்துவது குறைவு என  அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் ராந்தாவ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வியைக் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் அவர் கூறியதாவது, இந்தத் தோல்வியினால், மத்தியில் அரசாங்கம் மாறப்போவதில்லை எனக் கூறினார்.

63 வயதான அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், 10,397 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இது தேசிய முன்னணிக்கு கிடைத்த மூன்றாவது தொடர் வெற்றியாகும். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராமிற்கு சுமார் 5887 வாக்குகள் கிடைத்தன.