Home இந்தியா இந்தியா தேர்தல்: தமிழகம் தவிர்த்து மேலும் 10 மாநிலங்களில் 2-ஆம் கட்ட தேர்தல்!

இந்தியா தேர்தல்: தமிழகம் தவிர்த்து மேலும் 10 மாநிலங்களில் 2-ஆம் கட்ட தேர்தல்!

696
0
SHARE
Ad

புது டில்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தவிர்த்து, அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்களிலும் இரண்டாம்கட்டமாக இன்று வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இதில் இரண்டாம் கட்டத்தின் கீழ்,  தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் இயந்திரம் பழுதாகி உள்ளதாக வேளையில் மக்கள் அவதியுற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 11 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு திரிபுரா தொகுதி வாக்குப்பதிவு 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாம், ஒடிசா, பிகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளிலும், காஷ்மீரின் 2 தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.