Home நாடு மெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்!

மெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்!

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் மலேசிய நண்பன் நாளிதழ் முன்நின்று மலேசிய இந்தியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மெட்ரிகுலேஷன் விவகாரத்தை யாரும் அரசியல் படுத்தக் கூடாது எனக் கூறும் மக்கள் ஒருப்புறம் இருக்கையில், ஒரு சிலர் இந்த எதிர்ப்பானது நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு எனக் கூறிவருவதை சமூக ஊடகங்களில் மக்கள் சாடி வருகின்றனர்.

கடந்த 2018/2019-இல் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில இந்திய மாணவர்களுக்கு 1,706 இடங்கள் வழங்கப்பட்ட நிலையில், “புதிய மலேசியா” எனப்படும் பிரதமரின் கனவில், இந்தியர்களின் நிலை தற்போது கேள்விக் குறியாகி உள்ளது.

இந்த விவகாரத்திலும் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு கால அவகாசம் தர வேண்டும் என அரசியல் சார்ந்து மக்கள் பேசுவதை, எந்தவொரு அரசியல் கட்சிகளையும் சார்ந்திருந்து கருத்துரைத்து வரும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

கருத்து சொல்வது அவரவர் கடமை, ஆனால், நிலைமை என்னவென்று தெரிந்தும், தாங்கள் ஓட்டு போட்டுவிட்டோம், என்ற தலைக்கணத்தால், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நடுகதியில் நிற்பதற்கு இந்தியர்கள் மூடர்கள் அல்ல. மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் கல்வி அமைச்சு அமைதிக் காத்து வருவதும், பேச வேண்டிய அமைச்சர் இன்னமும் பேசாமல் மௌனம் காத்து வருவதுதான் மக்களின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.

மேலும், அமைச்சரவையில் இருக்கும் நான்கு இந்திய அமைச்சர்களின் மேல் மக்களின் காட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு காணொளிகளை மக்கள் பதிவேற்றம் செய்து வந்தாலும், இன்னமும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதே உண்மை.

நமக்குத் தேவையான ஒன்றை நியாயமான முறையில் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், எந்த ஓர் அரசியல் கட்சியையும் சார்ந்திருந்துப் பேசாமல், நடுநிலையாக நின்று அதில் இருக்கக்கூடிய நன்மை தீமைகளை கண்டறிந்து பேச வேண்டும். ஒரு தலைப்பட்சமாக இந்த விவகாரத்தை அணுகினால், பின்நாளில் நட்டமாகி நிற்கப் போவதென்னமோ இந்திய சமூகம்தான்.

ஓட்டு போட்டு விட்டோம், இனி அவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் எனும் மெத்தனப் போக்கே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. குறிப்பிட்ட ஒரு விவகாரம் தலைத்தூக்கும் பொழுது, மக்களாகிய நாம், நடுநிலையாக சிந்தித்து அதற்கான தக்கத் தீர்வினை எடுப்பதற்கு சரியான முறையில் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

புதியவர்கள், ஆகையால், கால அவகாசம் கொடுப்போம் என்ற ஒரு தலைபட்சமான கருத்துகளால் கடைசியில் ஏமாந்து போகப் போவது என்னமோ இந்திய சமூகம்தான்.