Home நாடு “ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்!”- ஷாபி அப்துல்லா

“ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்!”- ஷாபி அப்துல்லா

942
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோ லோவுக்கும் அம்பேங்க்கிற்கும் இடையிலான உரையாடல் கிடைக்கப்பெற்றால், நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட பரிவத்தனைகள் அனைத்தும், ஜோ லோ அம்பேங்க்கை ஏமாற்றி பெற்றவை என நிரூபிக்கும் சூழல் ஏற்படலாம் என முன்னாள் பிரதமரின் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் குழுவின் தலைவர் முகமட் ஷாபி அப்துல்லா கூறினார்.

நஜிப்பின் தலையீடு இல்லாமல் வங்கியில் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதைக் நிரூபிக்கும் வகையில், அந்த உரையாடல்கள் இடம்பெறலாம் என அவர் தெரிவித்தார்.

வேறொருவர் நஜிப்பின் வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தினால், அதற்கு நஜிப் எப்படி பொறுப்பேற்க முடியும்? இந்த விவரங்களை வைத்துக் கொண்டு எப்படி அவர்தான் குற்றவாளி எனக் கூற முடியும்?” என ஷாபி கேள்வி எழுப்பினார். 

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை, ஜோ லோவுக்கும் அம்பேங்க்கின் தொடர்புத்துறை அதிகாரியான யூவுக்கும் இடையிலான உரையாடல்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் தேவைப்படுவதாக முகமட் ஷாபி நீதிமன்றத்தில் கூறினார்.

இதைப் பற்றி மேலும் கூறுகையில், ஷாபியின் தரப்பு இவ்விருவரின் உரையாடல்களை விரைவில் பெறுவார்கள் என நம்புவதாகக் கூறினார்.

இந்த ஆதாரமானது, இந்த வழக்கு விசாரணைக்கு முக்கியமான ஒன்றாக அமையக் கூடும் என அவர் தெரிவித்தார்.