Home உலகம் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது!

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது!

829
0
SHARE
Ad

வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டு அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரிக்கு எதிராக, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையத் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

வெள்ளை மாளிகை வழக்கறிஞரிடம் அதிபர் டிரம்ப் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார். ரஷ்யத் தலையீட்டில் டிரம்ப்க்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அவைக்கு வந்து முல்லர் தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரச்சாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு இருந்திருப்பதற்கான சாத்தியம் குறித்து இந்த அறிக்கையில் அலசப்பட்டுள்ளது.