கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்குப் பிறகு தொடங்கப்பட்டது.
1எம்டிபி வழக்கு குறித்த மற்றொரு விசாரணையில் நஜிப் சம்பந்தப்பட்டதால், அவ்விசாரணை எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக நஜிப்பின் ஆலோசனையாளர் வான் அய்சுட்டின் வான் முகமட் கூறினார்.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆறு சீன மொழி பத்திரிகைகள் மீது ஆய்வுகள் நடத்த மாதத்திற்கு 150,000 திங்கிட் பணம் செண்டர் அப் ஸ்ட்ராதெஜிக் எங்கேஜ்மேண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக அதன் இயக்குனர் ரிதா சிம் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் முன்னிலையில் கூறினார். ரிதா, இவ்வழக்கின் 14-வது சாட்சியாவார்.
அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பபடும் எனவும் அஅவ்ர் கூறினார். அனைத்து பணமும் முன்னதாகக் குறிப்பிடப்பட்ட அம்பேங்க் வங்கியிலிருந்தே செலுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.