Home கலை உலகம் ஜோதிகா, கார்த்தி இணையும் குடும்பச் சித்திரம்!

ஜோதிகா, கார்த்தி இணையும் குடும்பச் சித்திரம்!

1068
0
SHARE
Ad

சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகாவின், தம்பியாக கார்த்தியும் அப்பாவாக சத்யராஜும் நடிக்க இருக்கிறார்கள்.

பாபநாசம் படத்தில் குடும்ப ரீதியிலான பிணைப்பை அழகாக காட்சிப்படுத்தி இரசிகர்களின் மிகப் பெரிய பாராட்டை பெற்ற ஜீத்து ஜோசப் மீண்டும் ஓர் அழகான குடும்பக் கதையுடன் களம் இறங்கி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளைத் தேர்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வரிசையில் பெயர் சூட்டப்படாத இந்தப் படமும் அமையும் என நம்பப்படுகிறது. இந்தப் படத்தை, ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.