Home நாடு மெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

மெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

761
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அமைச்சரவை என்ன முடிவு எடுக்கப் போகிறது என நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அதிரடியாக மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்தி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

எனினும் பூமிபுத்ராக்களுக்கான இட ஒதுக்கீடு 90 விழுக்காடாகத் தொடர்ந்து பின்பற்றப்படும். 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாதாருக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் 4 ஆயிரம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் கல்வி பயிலும் வாய்ப்புகளைப் பெறுவர்.

இதற்கு முன்னர் 2,500 பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளைப் பெற்றனர். இவர்களின் எண்ணிக்கை இனி 4 ஆயிரமாக உயரும்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் இதுவரையில் 22,500 பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளில் பயன்பெற்று வந்த நிலையில் அவர்களின் எண்ணிக்கை இனி 36 ஆயிரமாக உயரும்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவித்த கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், “பூமிபுத்ரா மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு (கோட்டா) என்பது அவர்கள் அதிக அளவில் அறிவியல் பாடங்களை எடுக்க வேண்டும் என்ற வியூகத்தில் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த கூடுதல் இட ஒதுக்கீடுகளின் மூலம் மேலும் அதிகமானோர் அறிவியல் தொடர்பான துறைகளில் நுழையும் வாய்ப்புகள் ஏற்படும்” என்றார்.