சென்னை: ஹாலிவுட் திரைப்படமான வென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த வேளையில், அத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா தவிர்த்து, பிற நாடுகளிலும் காலை 6 மணி முதல் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டை பொருத்தவரை அதிகாலை நான்கு மணிக்கே இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் பல இருப்பதால் திரையரங்குகளில் இருந்து யாரும் காணொளிகளை எடுத்து முகநூலிலோ அல்லது பிற சமூகப் பக்கங்களிலோ பரப்புவதைத் தவிர்க்கும்படியான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை திரையரங்கு உரிமையார்கள் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்பதிவிக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ் திரைப்பட நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஆங்கில படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பினை ஏன் வார வாரம் வெளியிடப்படும் தமிழ் படங்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை என்றும், அவ்வாறு செய்வதை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.