Home கலை உலகம் உலகளவில் வசூல் சாதனைப் படைத்து முதலிடத்தை நெருங்கும் எவென்ஜர்ஸ் எண்ட் கேம்!

உலகளவில் வசூல் சாதனைப் படைத்து முதலிடத்தை நெருங்கும் எவென்ஜர்ஸ் எண்ட் கேம்!

845
0
SHARE
Ad

ஹாலிவுட்: மார்வெல் நிறுவனத்தின் எவென்ஜர்ஸ் திரைப்படத்தின் எல்லா பாகங்களும் உலக சினிமா இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. அதன் வரிசையில் எவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் நிறைவுப் பாகமான எவென்ஜர்ஸ்எண்ட் கேம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உலகளவில் வெளியானது.

வெளியான நாளில் இருந்தே நல்ல வசூலைப் பெற்று வந்த இப்படம், தற்போது 2.18 பில்லியன் அமெரிக்க டாலர்  (9.05 பில்லியன் ரிங்கிட்) வரையிலும் வசூல் பெற்றதன் மூலம் உலகளவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் உள்ள அவதார் படத்தின் இடத்தை விரைவில் இப்படம் அடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

11 நாட்களில் டைட்டானிக் படத்தின் ஒட்டு மொத்த வசூலைத் தாண்டி எவென்ஜர்ஸ் எண்ட் கேம் சாதனைப் படைத்துள்ளது. அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ், எவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலைத் தாண்டிய நிலையில் இந்த வெற்றி கோட்டையும் தாண்டிய ஐந்தாவது படம் என்கிற பெறுமையைப் பெற்றுள்ளது எவென்ஜர்ஸ் எண்ட் கேம்.