Home உலகம் மனிதனின் சுயநலத்தினால் அழிவை நோக்கி 10 இலட்சம் உயிரினங்கள்!- ஐநா

மனிதனின் சுயநலத்தினால் அழிவை நோக்கி 10 இலட்சம் உயிரினங்கள்!- ஐநா

949
0
SHARE
Ad

வாஷிங்டன்: காடுகளை அழிப்பது, நீர் நிலை மற்றும் நில ஆக்கிரமிப்பு, மட்காத பொருட்களின் பயன்பாடு, புவி வெப்பமயமாதல் என பல்வேறு காரணங்களால் மிகப்பெரிய திமிங்கலம் தொடங்கி சின்னஞ்சிறிய உயிரினங்கள் வரை பெரிய ஆபத்தைச் சந்திக்கின்றன என அமெரிக்காவைச் சேர்ந்த குழு 50 நாடுகளில் 145 வல்லுநர்களைக் கொண்டு பல்லுயிர் பெருக்கம் குறித்து நடத்திய ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பத்து லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மனிதர்கள் இயற்கையை நாசம் செய்வதாகவும், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் என 10 லட்சம் உயிரினங்களை அழித்துக் கொண்டிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது

#TamilSchoolmychoice

மிக அரிய உயிரினங்களான சுமத்திரன் காண்டாமிருகம், டிட்டிகாகா நீர் தவளை, தாபிர், ராயல் ஆமை, சிபாகா குரங்கு, பிலிப்பியன் கழுகு, கருப்புக் கொண்டை குரங்கு உள்ளிட்ட இனங்கள் வேகமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு பாலூட்டிகள், 40 விழுக்காடு நீர்நில வாழ் இனங்கள், 33 விழுக்காடு பவளப்பாறைகள் நீர் வாழ் இனங்கள் விரைவில் அழிந்துபோகும் நிலையில் உள்ளன என அது குறிப்பிட்டுள்ளது.