Home நாடு 1எம்டிபி: 57 மில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா திருப்பிக் கொடுத்தது!

1எம்டிபி: 57 மில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா திருப்பிக் கொடுத்தது!

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து ஹாலிவுட் திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 57 மில்லியன் டாலரை (236 மில்லியன் ரிங்கிட்)  அமெரிக்கா திருப்பிக் கொடுத்து விட்டதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார்.

அப்பணமானது ஹாலிவுட் திரைப்படத்தை தயாரிக்கும் திரைப்பட நிறுவனமான ரெட் கிரானிட்டால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் நஜிப்பின் வளர்ப்பு மகனான ரிசா அசிஸ்சுக்குச் சொந்தமானது.

#TamilSchoolmychoice

திரும்பப்பெற்ற 57,036,688.68 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 1எம்டிபி சொத்து மீட்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 126 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் 1எம்டிபி நிதியிலிருந்து வாங்கியதாகக் கூறப்படும் ஜோலோவின் ஈகுய்டிமிட்டி ஆடம்பர படகு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.