Home இந்தியா தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!- தேர்தல் ஆணையம்

669
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் 46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் 13 வாக்குச் சாவடிகளில் வருகிற 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டன. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சில பகுதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. மோதல்கள், குளறுபடிகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

#TamilSchoolmychoice

அதன்படி தருமபுரியில் 8, திருவள்ளூர் 1, கடலூர்1, தேனி 2, ஈரோடு 1 என மொத்தமாக 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.