Home நாடு மே 13 கலவரம்: “ஒரு சில விவகாரங்களை பேசாமல் இருப்பதே நல்லது!” -மொகிதின்

மே 13 கலவரம்: “ஒரு சில விவகாரங்களை பேசாமல் இருப்பதே நல்லது!” -மொகிதின்

791
0
SHARE
Ad

புத்ராஜெயா: மே 13 கலவரமானது நமக்கெல்லாம் ஒரு பாடமாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, அதனை குறித்து வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் தரவுகள் அனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக ஏற்க வேண்டியுள்ளது என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அந்த சம்பவத்தை எவ்வகையில் ஏற்று அதனை நினைவில் கொள்ள வேண்டுமோ, அதனை மட்டும் செய்தால் போதுமானது என அவர் கூறினார். அதனை விடுத்து அந்த சம்பவம் அரசாங்க இரகசிய சட்டத்தின் (டிவைஒ) கீழ் உள்ளதாகக் கூறுவது அனைத்தும் தேவையற்ற கருத்து என அவர் குறிப்பிட்டார். .

தற்காலம் மற்றும் எதிர்காலமே நமக்கு  முக்கியம். நம்பிக்கைக் கூட்டணி அரசு அனைவருக்குமான அரசு. நாங்கள் நியாயமாக இருப்பதாக உறுதியளித்துள்ளோம்” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இனம் மற்றும் மதத்தினால் நாடு குழப்பத்தில் சூழ்வதை நாங்கள் விரும்பவில்லை. கடந்த காலத்தை அனுபவமாக மட்டுமே கொள்வோம்” என மொகிதின் குறிப்பிட்டார்.