Home நாடு பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டு, பெயரை கெடுக்கும் முயற்சி!- எஸ்.கேசவன்

பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டு, பெயரை கெடுக்கும் முயற்சி!- எஸ்.கேசவன்

1027
0
SHARE
Ad

சுங்கை சிப்புட்: சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.கேசவன் மீதான பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.  தமது பெயரை கெடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கையை தாம் பார்ப்பதாக அவர் கூறினார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தலில் உதவுவதற்காக குறிப்பிட்ட அந்த பெண்மணி அவரை தொடர்பு கொண்டதாக கேசவன் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாலியல்பாலுணர்வு எழுத்துப் பதிவுகள் மற்றும் பாலியல் படங்களை கேசவன் தமக்கு காண்பித்ததாக தனது புகாரில் அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் 2018 ஆண்டு முதல் ஏப்ரல் 2019 ஆண்டு வரையிலும்அவர் தம்மிடம் வேறு விதமாக நடந்து கொண்டதாகவும், “அம்முமற்றும் “”சயாங்என்று அழைக்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த படங்களும் பதிவுகளும் நேற்று வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்து கொள்ள வேண்டி, பலமுறை அவர் கூறியும் அந்நபர் கேட்காததை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த பேராக் மாநில மந்திரி பெசார், நியாயமான முறையில் காவல் துறை இந்த புகாரினை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.