Home இந்தியா இந்தியா: 17-வது மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்தது!

இந்தியா: 17-வது மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்தது!

734
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில், தற்போது இந்த 17-வது மக்களைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.

இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து, மீதமுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 19 ) தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

மேலும், தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிகிறது.