இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைக்கப்பட்டதும் நள்ளிரவு 1:45-க்குள் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு அரிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்ததாக அதன் செயற்பாட்டுத் தலைவர் எல். லோகேஸ்வரன் கூறினார்.
செந்துல், ஹாங் துவா மற்றும் திதிவாங்சாஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என அவர் கூறினார்.
“துணிகள், பைகள் மற்றும் காலணிகளை விற்பனை செய்த 30 கடைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன” என அவர் குறிப்பிட்டார்.
தீக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து ஆராய்ந்து வரப்படுகிறது என அவர் கூறினார்.