Home நாடு முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்!

முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்!

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னரின் தந்தையான முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா, இன்று புதன்கிழமை காலை 8:50 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.

இச்செய்தியை பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரொஸ்டி அறிக்கையின் மூலமாக இன்று தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, பகாங் மாநில சிம்மாசனத்தை சுல்தான் அப்துல்லாவிற்கு சுல்தான் அகமட் ஷா விட்டுக் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி பெக்கானில் உள்ள மாங்கா துங்கால் அரண்மனையில் பிறந்த சுல்தான் அகமட் ஷா, சுல்தான் அபு பாகாருக்கு மூன்றாவது குழந்தையாவார்.

அவரது 14-வது வயதில் பகாங் மாநிலத்தின் தெங்கு மக்கோத்தாவாக நியமிக்கப்பட்டார்.

1974-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பகாங் மாநிலத்தின் ஐந்தாவது சுல்தானாக பிரகடனப்படுத்தப்பட்டார்.

கடந்த 1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நாட்டின் துணை மாமன்னராக நியமிக்கப்பட்டார். பிறகு, 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி நாட்டின் மாமன்னராக பதவியேற்றார்.