Home நாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கைது!

கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கைது!

746
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிலதிபர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏழு காவல் அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இண்ஸ்பெக்டர் பதவியைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த மே 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தேசிய வங்கி ஊழியராவார்.

இவர்கள் அனைவரும் 31 வயது முதல் 41 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் 170 கீழ்வழக்குவிசாரணைநடத்தப்படும் என்றும் கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் மஸ்லான் லாசிம் கூறினார்.