தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இவர் ஊக்க மருந்துப் சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோமதியின் ‘ஏ’ மாதிரி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார் என்றும், மேலும் அடுத்த நிலை சோதனையான இவர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக இந்தியத் தடகள சார்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆயினும், இந்த குற்றச்சாட்டை கோமதி மறுத்துள்ளார்.
Comments